இலங்கையில் அரசியலில் ஏற்பட்ட திடீர் திருப்பம்! கோட்டாபய அதிரடி அறிவிப்பு
நாட்டை விட்டு தனது குடும்பத்தாரும் பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்கும் வரை பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) சுட்டிக்காட்டியுள்ளதாக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக ஆதாரங்களை மேற்கோள் காட்டி அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது,
ஆனால் இதுவரை எந்த ஒரு கட்சியும் இந்த முன்மொழிவை ஏற்க விருப்பம் தெரிவிக்கவில்லை. மூன்று நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி சபாநாயகரை அழைத்து இன்று (13-07-2022) பதவி விலகுவதாக அறிவித்தார்.
எவ்வாறாயினும், கடந்த 40 மணித்தியாலங்களில், அவர் நாளை பதவி விலகுவது குறித்து எதுவும் குறிப்பிடவில்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜினாமா செய்வதற்கு முன்னர் ஜனாதிபதியும் அவரது குடும்பத்தினரும் நாட்டை விட்டு வெளியேற பாதுகாப்பான வழி தேவை என அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
ஜனாதிபதி இன்று பதவி விலகாவிட்டால் கொழும்பில் நிலைமை மேலும் மோசமடைய வாய்ப்புள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.