கோடிக் கணக்கான ரூபா பணம் மோசடி ; வெளிநாடொன்றில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இலங்கையர்!
நாட்டில் பலரிடம் பண மோசடி செய்து விட்டு மாலைதீவுக்கு தப்பிச் சென்ற இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட பொலிஸ் குழுவொன்று மாலைதீவுக்குச் சென்று சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
கோடிக் கணக்கான ரூபா மோசடி
கைதானவர் தம்மிடம் பெறுமதியான இரத்தினக் கற்கள் இருப்பதாகக் கூறி மாணிக்கக்கல் வியாபாரிகள் உட்பட பலரை ஏமாற்றி கோடிக் கணக்கான ரூபா பணத்தை மோசடி செய்துள்ளார்.
அவரது மோசடி தொடர்பில் கொழும்பு குற்றப் பிரிவினருக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இந்நிலையில், சந்தேக நபருக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சிவப்பு அறிவித்தல் விடுத்தது.
அதன் அடிப்படையில் சந்தேகநபர் மாலைதீவில் கைது செய்யப்பட்டதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.