மின்னும் பொது கழிப்பறை; ஆர்வமுடன் செல்லும் சுற்றுவாசிகள்!
தாய்லாந்தில் உள்ள பொது கழிப்பறையை பார்வையிடுவதற்காக மட்டுமே திணமும் ஆயிரக்கணக்கானோர் சென்று வருவதாக கூறப்படுகின்றது.
தங்க நிற மாளிகையையும், அதற்கு முன்பு அழகாகக் காட்சி தரும் பசுமையான செடிகளும் தான் அதற்கு காரணம். பார்த்தவுடன் ஏதோவொரு ராஜாவுடைய அரண்மனை என எண்ணத தோன்றும் மாளிகை உண்மையில் ஒரு பொதுக் கழிப்பறை.
உலகிலேயே சொகுசான பொதுக் கழிப்பறை
அதுமட்டுமல்லாது உலகிலேயே சொகுசான பொதுக் கழிப்பறை இது என்றும் கூறப்படுகின்றது.
அரண்மனை போலத் தோற்றமளிக்கும் இந்தக் கழிப்பறைதான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. தாய்லாந்து வருகின்ற சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக இதை வடிவமைத்திருக்கின்றனராம்.
இதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து மற்ற இடங்களிலும் அரண்மனை கழிப்பறை உருவாகும் என தாய்லாந்தின் சுற்றுலா வளர்ச்சிக் குழு தெரிவித்துள்ளதாம்.