வீட்டை அண்டியுள்ள தீய சக்திகள் நீங்குவதற்கு வெள்ளிக்கிழமையில் செய்ய வேண்டிய பரிகாரம்
ஒரு மனிதனானவன் தனது வாழ்க்கைப் பாதையில் முன்னேறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் போது சில தீய சக்திகளின் ஆக்கிரமிப்பினால் தடைகள் ஏற்பட்டு வீழ்ச்சிப் பாதையினை அடையக்கூடும்.
அத்தகைய பிரச்சினைகளில் இருந்து தம்மை காத்து முன்னேறுவதற்கு வீட்டில் வெள்ளிக்கிழமை தோறும் இந்த தூபமுறையை தவறாது பின்பற்றினால் போதும்.
வீட்டில் உள்ள தீய சக்திகள் பீடை தரித்திரம் அனைத்தும் நீங்க
வெள்ளிக்கிழமை தோறும் வீட்டில் விளக்கு வைத்த பின் இந்த தூப முறையை போட வேண்டும்.
சுத்தமான பால் சாம்பிராணி , குங்கிலியம் , இலவங்க பட்டை தூள் ஆகிய மூன்றையும் சேர்த்து பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
மாலை ஆறு மணிக்கு பிறகு தூபக்காலில் கொட்டாங்குச்சி அல்லது கறிதுண்டு இவற்றைக் கொண்டு நன்றாக நெருப்பை மூட்டிக் கொண்டு தயார் செய்து வைத்துள்ள பொடியை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தூபத்தில் போடப்பட்ட புகையானது வீடு முழுவதும் நன்றாக பரவும் படியாக போட வேண்டும். இவ்வாறு தயார் செய்த தூபத்திற்கு மகாலட்சுமியை வசியப்படுத்தி வீட்டிலுள்ள தீய சக்திகளை போக்கக்கூடிய வல்லமை உண்டு.
இத்தூபமுறையினை வெள்ளிக்கிழமை, அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களிலும் தவறாமல் போட வேண்டும். இத்தூபமுறையினை நம்பிக்கையுடன் தவறாது போட்டு வருவதால் உங்கள் வாழ்வில் மேற்கொள்ளும் விடயங்கள் அனைத்தும் சுபீட்சமான வெற்றிகளை அடையக்கூடும்.
மகாலட்சுமியின் அருள் பெற்று வளமான வாழ்க்கையை வாழ்வோமாக.