இலங்கையில் இப்படியும் மோசடி!
பல்வேறு பகுதிகளில் நீண்டகாலமாகத் தொலைபேசி கம்பிகளை வெட்டி விற்பனை செய்து வந்த கும்பலைச் சேர்ந்த பிரதான சந்தேகநபர் ஒருவர் பேராதனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் சிலருடன் சேர்ந்து வாகனமொன்றில் வந்து, தொலைபேசி கம்பிகளை பழுதுபார்ப்பது போல் நடித்து மேற்படி திரட்டுச்சம்வத்தை மேற்கொண்டுள்ளனர்.

இவர்கள் நீண்டகாலமாக கெலிஓயா, உடபேராதனை, சங்கபோகம, மஹகந்த உள்ளிட்ட பல பிரதேசங்களில் இந்தத் திருட்டுச் செயலைத் தொடர்ந்து முன்னெடுத்து வந்துள்ளனர்.
இவ்வாறு சட்டவிரோதமாக வெட்டப்பட்ட தொலைபேசி கம்பிகள் அனைத்தும் கம்பளை பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையமொன்றிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது
. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று வியாழக்கிழமை (16) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதோடு, இந்த சம்பவம் குறித்து பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.