நுவரெலியா மக்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை!
நாட்டில் பல பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் பல பிரதேசங்களில் பகல் வேளையில் கனத்த மழை பெய்து வருகிறது.
இந்த மழை காரணமாக நீரோடைகள், ஆறுகள் நீர்வீழ்ச்சிகள் ஆகியவை பெருக்கெடுத்துள்ளன. இதனால் நீரோடைகள், ஆறுகள் மற்றும் நீர்வீழ்ச்சிக்கு சமீபமாக வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் திடீர் திடீரென கடும் மழை பெய்வதனால் ஆற்றில் நீராடுவதனையும் அருகாமையில் செல்வதனையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என பாதுகாப்பு துறையினர் எச்சரித்துள்ளனர்.
இதே நேரம் பொகவந்தலாவ பகுதியில் இன்று பகல் முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக கெசல்கமுவ ஓயா பெருக்கெடுத்துள்ளது.
இதன்போது கடந்த பல மாதங்களாக வரட்சியில் தாழ்ந்து காணப்பட்ட நீர் மட்டம் தற்போது உயர்ந்து வருகிறது அது மாத்திரமன்றி தோற்றம் பெற்ற கட்டடங்கள் மற்றும் குன்றுகள் ஆகியனவும் மீண்டும் நீரில் மூழ்க ஆரம்பித்துள்ளன.
வரண்டு போய் கிடந்த நீரூற்றுக்கள் மற்றும் அருவிகள் ,ஓடைகள் .நீர் வீழ்ச்சிகள் என்பனவும் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளன.
மேலும் கடும் மழை காரணமாக தேயிலை கொழுந்து பறிக்கும் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.