இலங்கையில் மனித நேயமிக்க ஓர் உன்னத சேவை!
முன்னொரு காலத்தில் உலகில் வேறெங்கும் இல்லாதவாறு கால் நடைகள் நீர் அருந்தும் தொட்டிகளை வீடுகளுக்கு வெளியேயும், வீதிகளில் கால் நடைகள் முதுகு நேய்க்கும் ஆவுரஞ்சி கல் என்ற தூண்களையும்,
தெருவில் போவோர் இளைப்பாற திண்ணைகள், பொதிகளை இறக்கி வைத்து பயணத்தை தொடர சுமை தாங்கிகள், நீர் வழங்க கேணிகள், ஓய்வெடுக்க பெரு மரங்கள் என தன்னலம் பார்க்காது கட்டமைத்து வைத்திருந்த ஜீவகாருண்யம் மிக்க மரபில் வந்தது நம் தமிழ் சமூகம்.
ஆனால் இன்று அதெல்லாம் நாம் செவிவழிக்கதைகளாகவே கேட்கின்றோம். இலங்கையில் தற்போது கொரோனாவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதியாவசிய பொருகளின் விலைகளும் அதிகரித்துள்ளதனால் மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளனர்.
மகளின் இந்த நெருக்கடிகளால் ஆதரவில்லாத ஐந்தறிவு பிரானிகளும் பட்டினியல் வாழ்வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் , We Feeders எனும் அமைப்பு ஆதரவற்ற விலங்குகளுக்கு உணவளிக்கும் பணிகளை செய்துவருகின்றனர்.
We Feeders கைவிடப்பட்ட வாயில்லா ஜீவன்களுக்கு தொடர்ச்சியாக உணவளிக்கும் பணிகளையும், மருத்துவ சேவைகளையும், மாணவர்களிடையே Speak for Speechless என்ற விளிப்புணர்வு நிகழ்ச்சிகளையும், கைவிடப்பட்டு தெருக்களில் வீசப்படும் நாய்க்குட்டிகள், பூனைக்குட்டிகளை முடிந்தவரை தத்தெடுத்து தம்வீட்டில் வளர்க்க தயாராகவுள்ளவர்களிடம் சேர்ப்பித்து வருவதையும் மேலும் விலங்கு நலன் சார்ந்த சேவைகளையும் செய்து வருகின்றது.
வீடுகளில் வளர்க்க நாய்க்குட்டிகள், பூனைக்குட்டிகள் தேவைப்படுவோரிற்கு இந்த அமைப்பினர் அதனை வளர்க்கவும் ஆவன செய்கின்றனர். பல கைகள் சேரும் போதே சில உயிர்களை காப்பாற்ற முடிகிறது. அதில் உங்கள் பங்களிப்பும் இருந்தால் மேலும் சில உயிர்களை வாழ வைக்க முடியும்.
இந்நிலையில் தன்னார்வலர்களாக களமிறங்கி சேவையாற்றும் இந்த இளைஞர்களுக்கு சமூக ஆர்வல்கள் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறிவருகின்றனர்.



