வாகன இறக்குமதியாளர்களுக்கு விதிக்கப்பட்ட புதிய நிபந்தனை
இறக்குமதியாளர் ஒருவரால் 6 மாதங்களுக்குள் இறக்குமதி செய்யப்பட்ட மொத்த வாகனங்களின் எண்ணிக்கையில் 25% சதவீதத்தை பதிவு செய்யத் தவறினால், குறித்த இறக்குமதியாளரின் இறக்குமதி அனுமதி இரத்துச் செய்யப்படும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்நியச் செலாவணி இருப்புகளைப் பாதுகாக்கவும், அதிகப்படியான வாகனங்களை இறக்குமதி செய்வதைத் தடுக்கவும், தேவையற்ற முறையில் வாகனங்களின் சேமிப்பைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், தனிப்பட்ட ரீதியாக வாகனங்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், ஒரு வாகனத்தை மட்டுமே இறக்குமதி செய்ய முடியும் என்றும், மேலே குறிப்பிடப்பட்ட நிபந்தனைகள் அதற்குப் பொருந்தாது என்றும் நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.