இவரைக் கண்டால் உடனே அறிவிக்கவும்; சிறுமியை தேடும் பொலிஸார்
நுவரெலியா - உடப்புஸ்ஸலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒல்டிமார் தும்பவத்தை தோட்டத்தில் வசிக்கும் தியாகராஜ் சரணியா (வயது 14) என்ற சிறுமியே காணாமற் போனவராவார்.
கடந்த வெள்ளிக்கிழமை (03.11.2023) பகல் 11 மணியளவில் தனது தாயிடம் கைபேசியில் உரையாடிய பின்னர் சிறுமி காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாயமான சிறுமி
கடந்த (01.11.2023) திகதி புதன்கிழமை தந்தை, சிறுமியை கந்தப்பளை - பூப்பனை கீழ் பிரிவு தோட்டத்தில் வசிக்கும் சிறுமியின் பாட்டி வீட்டில் தீபாவளி பண்டிகை முடியும் வரை பாட்டிக்கு துணையாக அழைத்து வந்து விட்ட நிலையிலேயே காணாமற்போயுள்ளார்.
இவர் தொடர்பான தகவல் அறிந்தால் அருகில் உள்ள பொலிஸ் நிலையம் அல்லது 075 620 3901 என்ற தொலைபேசிக்கு தகவல் வழங்குமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.