வயல் நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட மர்ம பொருள்; திருகோணமலையில் பதற்றம்!
திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் - பம்மான்குளம் வயல் வெளியில் வெடிக்காத நிலையில் 81 ரக மோட்டார் ரக குண்டொன்று இன்று காணப்பட்டுள்ளது.
நபரொருவர் வயல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது குறித்த மோட்டார் குண்டு இருப்பதைக் கண்டு குறித்த பகுதி விவசாய சங்கம் ஊடாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த மோட்டார் குண்டு அதே இடத்தில் காணப்படுவதுடன் மூதூர் நீதிவான் நீதிமன்றின் அனுமதியுடன் மோட்டார் குண்டு மீட்கப்படவுள்ளது.
மேலதிக விசாரணை
யுத்த காலத்தில் பயன்படுத்த குறித்த குண்டு வெடிக்காத நிலையில் வயல் நிலத்தில் புதையுண்டு இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.