யாழ் திருமண மண்டபம் ஒன்றில் தவிர்க்கப்பட்ட பெரும் அனர்த்தம்
யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை வடிவேலர் மண்டபத்தில் மின் ஒழுக்கு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இச் சம்பவம் இன்று காலை 11:30 மணியளவில் நிகழ்ந்துள்ளது.
துன்னாகை அல்லையம்பதி வடிவேலர் மண்டபத்திலிருந்து தீ பரவி புகை வெளியேறுவதை அவதானித்த அங்கிருந்தவர்கள் மற்றும் அருகிலுள்ள ஆலயத்திற்க்கு சென்றிருந்தவர்கள் துரிதமாக செயற்பட்டு அங்கிருந்த தீயணைப்பு இரசாயனத்தையும், மணல் மண்ணையும் பயன்படுத்தி தீயை அணைத்ததுடன் உடனடியாகவே மின்சார சபைக்கும் அறிவித்தனர்.
துரிதமாக செயற்பட்ட மின்சார சபை மின் இணைப்பினையும் துண்டித்ததன் காரணமாக பல கோடி ரூபா பெறுமதியான திருமண மண்டபம் காப்பாற்றப்பட்டுள்ளதுடன் பெரும் அனர்த்தம் தவிர்க்கப் பட்டுள்ளதாக அங்கிருந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.