இலங்கையில் நேர்ந்த நெகிழ்ச்சி சம்பவம் ; சுற்றுலா பயணியின் மனதை வென்ற உள்ளூர்வாசி
பேருந்து ஒன்றில் தவறவிடப்பட்ட 1,50000 பெறுமதியான கைக்கடிகாரத்தை உரியவரிடம் ஒப்படைத்த பேருந்து நடத்துநருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இது தொடர்பில் தெரிய வருவதாவது,
ஸ்பெயினைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இருவர் கண்டியிலிருந்து நுவரஹம நோக்கிச் செல்லும் தனியார் பேருந்தில் மஹியங்கனை நோக்கிப் பயணித்துள்ளர்.
பயணத்தின் போது 150000 ஆயிரம் பெறுமதியான கைக்கடிகாரம் ஒன்றை பேருந்தில் தவற விட்டுச் சென்றுள்னர்.
குறித்த சுற்றுலாப் பயணிகள் இருவரும் பேருந்திலிருந்து இறங்கி மஹியங்கனையில் உள்ள ஹோட்டலுக்குச் சென்றனர்.
அதன்பின்னரே கடிகாரத்தை தவறவிடப்பட்டுள்ளது என்பதை அறிந்தனர். இதனையடுத்து ஹோட்டல் உரிமையாளர்களிடம் விடயத்தைத் தெரிவித்துள்ளனர்.
அதன்பின்னர் பேருந்தின் ரிக்கெட்டில் இருந்த தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்புகொண்டு கைக்கடிகாரம் தவறவிடப்பட்டதை ஹோட்டல் உரிமையாளர் பேருந்தின் உரிமையாளருக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.
பேருந்தை துப்புரவு செய்த போது கைக்கடிகாரத்தை நடத்துநர் கண்டெடுத்தாகவும் அதனை உரியவரிடம் மறுநாள் ஒப்படைப்பதாகவும் பேருந்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
மறுநாளான நேற்று மஹியங்கனையில் சுற்றுலாப் பயணிகள் வரவழைக்கப்பட்டு குறித்த கடிகாரம் நடத்துநரால் ஒப்படைக்கப்பட்டது.
கடிகாரத்தைப் பெற்றதன் பின்னர் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தி குறித்த நடத்துநருக்கு நன்றி தெரிவித்துச் சென்றுள்ளனர்.
150000 ரூபா பெறுமதியான கடிகாரத்தைக் கண்டெடுத்தும் அதன் மீது ஆசை கொள்ளாமல் உரிமையாளர்களிடம் ஒப்படைத்த கண்டியைச் சேர்ந்த நடத்துநரின் மனிதநேயமிக்க செயற்பாட்டிற்கு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.