இலங்கையின் ஒவ்வொரு பிரஜைக்கும் 11 இலட்சத்து 81 ஆயிரம் ரூபா கடன்!
இலங்கையின் ஒவ்வொரு பிரஜையும் கடனாளியாகியுள்ளதாகவும், அவர்கள் எவ்வளவு ரூபாவுக்கு கடனாளிகளாக்கப்பட்டுள்ளார்கள் என்பதும் ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான ஆய்வை பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார விஞ்ஞானம் மற்றும் புள்ளிவிபர கற்கைப் பிரிவின் பேராசிரியர்களான வசந்த அத்துக்கோரள மற்றும் தயாரத்ன பண்டா ஆகியோர் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.
தனி நபர் ஒருவர் 11 இலட்சத்து 81 ஆயிரம் ரூபா
அந்த ஆய்வின்படி, கடந்த ஏப்ரல் வரையான காலப்பகுதி வரை நாடு பெற்ற கடனில் தனி நபர் ஒருவர் 11 இலட்சத்து 81 ஆயிரம் ரூபாவை செலுத்தவேண்டிய கடனாளியாக மாறியுள்ளார்.
மேலும் நான்கு பேர் கொண்ட குடும்பமொன்று 47 இலட்சத்து 24 ஆயிரம் ரூபாவை கடனாக செலுத்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 2020ஆம் ஆண்டில் 6 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாவாக காணப்பட்ட தனிநபர் கடன் தொகை இவ்வாண்டு ஏப்ரல் மாதமாகும்போது 4 இலட்சத்து 9 ஆயிரம் ரூபாவால் அதிகரித்து 11 இலட்சத்து 81 ஆயிரம் ரூபாவாக காணப்படுகிறதாகவும் அந்த தகவல்கள் தெரிவிகின்றன.