நண்பர்களின் பந்தயத்தால் பறிபோன உயிர்
இந்தியாவின் கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் நண்பர்களிடம் 10,000 ரூபா பந்தயம் கட்டி 5 போத்தல் மதுபானத்தை குடித்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
21 வயது ஆன கார்த்திக் என்ற வாலிபர் தனது நண்பர்கள் 5 பேரிடம் மதுவில் தண்ணீர் கலக்காமல் ஐந்து முழு போத்தல் மதுபானத்தை குடிக்கலாம் என்று கூறியுள்ளார்.
தண்ணீர் கலக்காமல் மதுபானத்தை குடிக்கலாம்
இதையடுத்து வெங்கட ரெட்டி, கார்த்திக்கிடம் 10,000 ரூபா பந்தயம் கட்டியுள்ளார். தொடர்ந்து 5 பாட்டில் மதுபானத்தை குடித்த கார்த்திக்கின் உடல் நிலை மோசமானது.
இதையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கார்த்திக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிர்ழந்த கார்த்திக்கிற்கு திருமணமாகி ஒரு வருடமே ஆகும் நிலையில், அவருக்கு 8 நாட்களுக்கு முன்பு தான் குழந்தை பிறந்துள்ளது.
கார்த்திக் உயிரிழந்தது தொடர்பாக 6 பேர் மீது நங்கலி பொலிஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுஇருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மற்றவர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.