இலங்கையில் தலைசுற்றவைக்கும் தோடம்பழ விலை!
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ தோடம்பழத்தின் விலை ரூ.1,990 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இறக்குமதி செலவு மற்றும் வரி அதிகரிப்பு காரணமாக தோடை உள்ளிட்ட பழங்களின் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளதாக பழ இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன், இறக்குமதி செய்யப்பட்ட மூன்று தோடம்பழங்கள் 100 முதல் 200 ரூபா வரையிலான விலையில் விற்பனை செய்யப்பட்டன.
அதேசமயம் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பல தோடம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதால் இறக்குமதி செய்யப்பட்ட தோடம்பழங்களே இலங்கை சந்தையில் அதிகம் விற்பனையாகின்றன.