யாழில் அடாத்தாக அமைக்கப்பட்ட விகாரை நிகழ்வில் மாவிட்டபுரம் அறக்கட்டளையினர்!
யாழ்ப்பாணம் வலி. வடக்கு பிரதேச செயலர் பிரிவிலுள்ள தையிட்டி கிராமத்தில், 8 பேருக்குச் சொந்தமான விடுவிக்கப்படாத தனியார் காணியில் விகாரை அமைக்கப்பட்டுள்ளது.
மக்களின் காணிக்யில் அடாத்தாக அமைக்கப்படும் திஸ்ஸ விகாரையில் இந்த 100 அடி தூபியை அமைத்து இருக்கின்றார்கள். நேற்றையதினம் பெருமெடுப்பில் அங்கு பூசைகள் நடத்தப்பட்டிருந்தன.
பெருமெடுப்பில் இடம்பெற்ற நிகழ்வு
தனியாருக்கு சொந்தமான காணிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட ஒரு தூபியின் நிகழ்வில் மாவிட்டபுரம் AVR அறக்கட்டளையினர் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
அதேவேளை தமிழர் பிரதேசசங்களில் மக்களின் காணிகளை ஒருபக்கம் தொல்பொருள் திணைக்களமும் மறுபக்கம் இவ்வாறு அடாத்தாக விகரைகளும் அமைக்கப்பட்டு வருகின்றமை மக்கள் மத்தியில் விசனத்தை தோற்றுவித்துள்ளது.
அதேவேளை யாழில் அமைக்கப்பட்டுள்ள விகாரைகளில் இதுவே மிகப் பெரிய விகாரை என்றும் சொல்லப்படுகின்றது.
மேலும் தையிட்டிப் பகுதியில் இருந்த நரசிம்ம வைரவர் கோயிலைப் பௌத்த விகாரையாக அமைக்கபப்ட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.