மக்கள் போராட்டத்தை உடைக்கும் அரசாங்கம்; சஜித்!
இதற்கு முன்னர் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் இருபத்தி இரண்டு தடவைகளுக்கு மேல் முயற்சித்துள்ளதாகவும், ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் ஒரே நோக்கம் தேர்தலை நடத்தாதிருப்பதே எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மக்களுக்கு தங்களின் ஜனநாயக உரிமையான வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்த சந்தர்ப்பம் கிடைக்காவிடின் ஜனநாயகம் சீர்குலைந்துபோவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ஜனநாயகத்தை சீர்குலைக்கவா அரசாங்கம் முயற்சிக்கிறது எனவும் கேள்வி எழுப்பினார்.
எதிர்ப்பு மற்றும் போராட்டங்களை அடக்குவதற்கு அரசாங்கம் கண்ணீர் புகை பிரயோகங்களைப் பிரயோகிப்பது தொடர்பில் கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர், நச்சுத் தன்மை வாய்ந்ததாக இருந்தாலும், நச்சுத்தன்மையற்றதாக இருந்தாலும் மக்கள் போராட்டத்தின் மீது கண்ணீர் புகை பிரயோகங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கத்திற்கு எத்தகைய உரிமையும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.