பிரித்தானியாவை சேர்ந்த சிறுமிக்கு தமிழ் நபரால் ஏற்பட்ட அவலம்
தமிழர் ஒருவர் பிரித்தானியாவை சேர்ந்த 16 வயதுக்குட்பட்ட சிறுமியை வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளியாக சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
விசாரணையின் பின்னர் வியாழன் அன்று வூட் கிரீன் கிரவுன் நீதிமன்றத்தால் அந் நபருக்கு 30 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் அதே நீதிமன்றத்தால் டிசம்பர் மாதத்தில் நடந்த விசாரணையின் முடிவில் அவர் ஒரு சிறுமியுடன் நான்கு வன்கொடுமை செயற்பாடுகளின் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார்.
வன்கொடுமை
அந் நபர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் 2010 ஆம் ஆண்டு வன்கொடுமை முயற்சியில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் விசாரணை மேற் கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த நபர் நீரிழிவு நோய்க் காரணங்களைச் சுட்டிக்காட்டி அவருக்கு வழங்கப்பட்ட தண்டணை மனிதாபிமான அடிப்படையில் 30 மாதங்களுக்குக் குறைக்கப்பட்டுள்ளது.
அத்தோடு குற்றவாளியின் தரப்பில் பாதிக்கப்பட்ட பெண்ணுடைய தாயின் நன்நடத்தையை கேள்விக்குள்ளாக்கும் வகையில் நடந்து கொண்டதையும் நீதிபதி வன்மையாகக் கண்டித்துள்ளார்.
இவர் பிரித்தானியாவில் உள்ள தமிழ் வர்த்தக பிரமுகராவார்.
குறித்த நபர் பரதநாட்டியம், அரங்கேற்றம் போன்ற நிகழ்வுகளை நடத்துவது, ஆலயங்களுக்கு மேளம் நாதஸ்வரம் போன்ற இசைக் கலைஞர்களை வரவழைத்துக் கொடுப்பது போன்ற வர்த்தகங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
சிறுமி தனது 21வது பிறந்த தினத்தன்று தாயாருக்கு தனக்கு ஏற்பட்ட அக்கொடிய அனுபவங்களை கூறியுள்ளார்.
அதன் பின் ஒரு விரிவுரையின் போது அப் பெண்ணின் அவலம் வெளி வந்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.