தனது மகளை கொலை செய்ய முயற்சித்த தந்தை! அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தை சேர்ந்த நவீன் குமார் என்பவர் நில விற்பனை தொழில் நடத்தி வருபவர்.
இவர் தனது மகளின் காதலிற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
நவீன் குமார் பல முறை எச்சரித்தும் தனது மகள் அந்த நபருடன் தொடர்ந்து பேசி வந்ததும் தனது காதலை முறித்துக்கொள்ளாததாலும் ஆத்திரமடைந்துள்ளார்.
வீட்டில் மாடியில் நின்றுகொண்டிருந்தபோது அங்கு மரத்தில் இருந்த குரங்கை பார்த்து பயந்து தனது மகள் மாடியில் இருந்து கிழே விழுந்துவிட்டதாகவும், அதனால் காலில் காயம் ஏற்பட்டதாக கூறி அருகில் உள்ள மருத்துவமனையில் தனது மகளை அனுமதித்துள்ளார்.
அந்த மருத்துவமனையில் சிகிச்சை நடைபெற்று வந்த நிலையில் அங்கிருந்து வேறொரு மருத்துவமனைக்கு தனது மகளை நவீன் சிகிச்சைக்காக மாற்றியுள்ளார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த அந்த இளம் பெண்ணின் உடல்நிலை திடீரென மிகவும் மோசமடைந்துள்ள நிலையில் இளம்பெண்ணுக்கு வழங்கப்பட்ட மருந்துகளையும் உடல்நிலையையம் மருத்துவர்கள் பரிசோதித்துள்ளனர்.
அப்போது, இளம்பெண்ணின் உடலில் விஷமாக மாறக்கூடிய பொட்டாசியம் குளோரைடு ஊசியை உடலில் ஏற்றி உள்ளது தெரியவந்துள்ளது.
இது குறித்து பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த பொலிஸார் மற்றும் மருத்துவர்கள் மருத்துவமனையில் அப்பெண் அனுமதிக்கப்பட்ட அறைக்குள் ஒரு நபர் நுழைவதை கண்டுள்னனர்.
அந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்திய போது மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றி வந்த நரேஷ் குமார் மருத்துவர் உடையில் இளம்பெண் அனுமதிக்கப்பட்ட அறைக்கு சென்றது தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து நரேஷ் குமாரை பிடித்து விசாரணை நடத்தியதில் பெண்ணின் தந்தை நவீன் குமார் தனக்கு 1 லட்ச ரூபாய் கொடுத்து அப்பெண்ணுக்கு விஷ ஊசி செலுத்தி கொல்லும்படி தன்னிடம் கூறியதாலேயே அவ்வாறு செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
அத்தோடு இளம்பெண்ணின் தந்தையான நவீனை கைது செய்ததோடு அவரிடம் நடத்திய விசாரணையில் தனது மகள் காதலிப்பது தனக்கு பிடிக்கவில்லை எனவும், காதலை கைவிடும்படி பல முறை கூறியும் அவர் கேட்காததால் நரேஷ் குமாருக்கு 1 லட்ச ரூபாய் கொடுத்து தனது மகளை விஷ ஊசி செலுத்தி கொல்ல திட்டமிட்டதையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதற்கு மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஒரு பெண்ணும் உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ள நிலையில் இளம்பெண்ணின் தந்தை, மருத்துவமனை உதவியாளர் , மருத்துவமனை ஊழியாரான பெண் ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அப்பெண்ணின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.