பொருளாதார நெருக்கடி ;உயிரை மாய்ந்த இளம் தந்தை
பிள்ளையின் தந்தை ஒருவர் வீட்டுக் கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.
ஹோமாகம வடக்கு பிட்டிபன ஹெட்டிகொடவில் வாடகை வீட்டில் தங்கியிருந்த தோமஸ் திஸாநாயக்க கலன மதுசங்க என்ற 28 வயதுடைய நபரே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இத் தந்தை தற்கொலை செய்துள்ளார்.
கூலி வேலை செய்து சம்பாதித்து வரும் இவர் கடந்த சில நாட்களாக வேலை இல்லாத நிலையில் மனமுடைந்துள்ளார் அடிக்கடி தற்கொலை செய்து கொள்ள நினைப்பதாகவும் மனைவியிடம் கூறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு வயது மகளின் தந்தையான அவர் குடும்பம் வாழ சரியான வழி இல்லாததால் 15 முறைக்கு மேல் தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்து கடிதம் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.