மருந்து ஒவ்வாமைத் தொடர்பில் அறிக்கை வெளியிடப்படும்! R.M.S.K ரத்நாயக்கத் தெரிவிப்பு
கண் சத்திரசிகிச்சையின் பின்னர் பயன்படுத்தப்படும் மருந்தினால் ஏற்பட்டதாக கூறப்படும் ஒவ்வாமை தொடர்பில் அறிக்கை வெளியிடப்படும் என சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.எம்.எஸ்.கே ரத்நாயக்க, தெரிவித்துள்ளார்.
மேற்படி இத்தீர்மானம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு வந்து சென்ற போதே எடுக்கப்பட்டதாகவும் இது குறித்து விசாரணை செய்யும் குழுவினால் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், அறிக்கை வெளியிடப்படும் எனவும் அவர் கூறினார்.
அனைத்து தரவு அறிக்கைகளையும் பகுப்பாய்வு செய்து, முழுமையான அறிக்கையை சுகாதார செயலாளரிடம் சமர்ப்பித்த பின்னர் அடுத்த நடவடிக்கைகள் என்ன என்பதை அமைச்சகம் தீர்மானிக்கும் என சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.எம்.எஸ்.கே ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.