முகத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் தொடர்பில் வைத்தியர் விடுத்துள்ள எச்சரிக்கை
முகத்தை வெண்மையாக்க பாவிக்கும் ஆபத்தான கிரீம்கள் மூலம் புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக வைத்தியர் தனுஷா பாலேந்திரின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இவர் இத்தகவலை அவரது சமூக வலைத்தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், முகத்தை வெண்மையாக்க உதவும், சந்தையில் கிடைக்கும் தரமற்ற க்ரீம்களை பாவித்து பக்க விளைவுகளுடன் வரும் நோயாளர்களுக்கும் என்னாலான சிகிச்சை மற்றும் அறிவுரைகளை வழங்கி வருகின்றேன்.
ஆனாலும் இவ்வாறான தரமற்ற பாதகமான க்ரீம்கள் சர்வ சாதாரணமாக எல்லா கடைகளிலும் கிடைக்கக் கூடியதாக இருப்பதனால் இவைகளை தொடர்ந்து பயன்படுத்தி வரதான் செய்கின்றனர்.
இதை தடுக்கும் வழிமுறைகள் இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. சாதாரணமாக எல்லா கடைகளிலும் இவை அடுக்கி வைக்கப்பட்டுள்ள க்ரீம்களில் தான் புற்றுநோயை விளைவிக்கும் பார உலோகங்களின் அளவு அதிகம் காணப்படுகின்றது.
பணம்கொடுத்து நோயைவிலைக்குவாங்கும்செயற்பாடுதான் இந்த க்ரீம்களை பாவிப்பதால் ஏற்படும்.
நாம்தான் விழிப்பாக இருக்க வேண்டும். தயவு செய்து வெள்ளைத்தோல் வேண்டும் என்ற மாயயை விட்டுவிட்டு ஆரோக்கியமாக இருக்க முயற்சிப்போம் என வைத்தியர் தனுஷா பாலேந்திரன் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.