குறைந்துவரும் எரிபொருள் வரிசை; கையிருப்பு தொடர்பில் வெளியான தகவல்!
நாட்டில் அடுத்த 30 நாட்களுக்கு போதுமான டீசல் கையிருப்பில் உள்ளதுடன், , 22 நாட்களுக்கு போதுமான பெட்ரோலும் இருப்பில் உள்ளதாகவும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்தது.
நேற்று (22) நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 4000 மெட்ரிக் தொன் டீசல் விநியோகிக்கப்பட்டுள்ளது. அத்துடன், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 3000 மெட்ரிக் தொன் பெட்ரோல் விநியோகிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்தது.
இதேவேளை, வாகன இலக்கத்திற்கு ஏற்ப எரிபொருள் வழங்கும் திட்டத்திற்கு சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளதாக அகில இலங்கை பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதோடு எரிபொருளுக்கான வரிசைகளும் குறைந்து வருவதாக சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஸ தெரிவித்தார்.
இந்நிலையில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக இலங்கை பெட்ரோலிய தனியார் பௌசர் உரிமையாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் சாந்த சில்வா கூறினார்.