வெளிநாடொன்றில் இருந்து இலங்கைக்கு விமானத்தில் வந்த ஆபத்தான பொருள்!
கொலம்பியாவிலிருந்து விமான தபால் சேவை மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட கொக்கைன் போதைப்பொருள் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் வந்த் பொதிகளிலிருந்து 2 கிலோ 14 கிராம் கொக்கைன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மொத்த மதிப்பு 75 மில்லியன் ரூபா
குறித்த போதைப்பொருளானது மின் உபகரணங்களில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டு பொதிகளாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் கணேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 23 மற்றும் 24 வயதுடைய இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை கைப்பற்றப்பட்ட கொக்கைன் போதைப்பொருளின் மொத்த மதிப்பு 75 மில்லியன் ரூபா எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.