இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல்; நபருக்கு நேர்ந்த கதி
வத்தளையில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெரவலபிட்டிய பிரதேசத்தில் நேற்று (25) மாலை இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கூரிய ஆயுதத்தால் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
படுகாயமடைந்த இளைஞன்
தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் காயமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.