வானிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!
இலங்கையில் இன்று (17) பல மாகாணங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேற்கு, சபரகமுவ, வடமேல், மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில், மாலை நேரத்திலோ அல்லது இரவு நேரத்திலோ மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று கூறப்படுகிறது.
மேலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மழை குறையும் வாய்ப்பு உள்ளது.
மேல் சப்ரகமுவ வடமேற்கு மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு வவுனியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் கூறப்படுகின்றது.
அதேவேளை இடியுடன் கூடிய புயல் காற்று மற்றும் மின்னல் ஏற்படலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது எதிர்வு கூறியுள்ளது.