ஈழத் தமிழர்கள் தொடர்பில் 6 தமிழ் அமைப்புகள் விடுத்த அழைப்பு!

Election Commission of Sri Lanka Tamils
By Sundaresan Feb 06, 2023 05:47 PM GMT
Sundaresan

Sundaresan

Report

இலங்கையில் நிலவும் பிரச்சினைக்கு தீர்வு காண ஈழத் தமிழர்களுக்கு சுதந்திர வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அமெரிக்காவின் 6 தமிழ் அமைப்புகள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.

இது தொடர்பில் அவை, அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளன. நியூயோர்க்கில் உள்ள உலகளாவிய தமிழ் அமைப்புகளின் சம்மேளனம், வடக்கு அமெரிக்காவின் தமிழ்ச் சங்கங்களின் சம்மேளனம், நியூயோர்க்கில் உள்ள இலங்கை தமிழ் சங்கம், வோஷிங்டனில் இயங்கும் இலங்கையில் சமத்துவம், நிவாரணத்துக்கான மக்கள் அமைப்பு, வடக்கு கரோலினாவில் உள்ள ஐக்கிய தமிழ் அமெரிக்கர்கள் மற்றும் வடக்கு கரோலினாவில் இயங்கும் உலகத் தமிழர் அமைப்பு ஆகிய அமைப்புகள் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளன.

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் கதி என்ன என்பதை அறியக் கோரி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தமிழ்க் குடும்பங்கள் வீதியோரப் போராட்டங்களை ஆரம்பித்து ஆறு வருடங்கள் நிறைவடைந்துள்ளன.

இந்தநிலையில் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைக்காக இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு ஆறு முக்கிய தமிழ் அமைப்புகளும் இந்த கடிதத்தில் அமெரிக்காவைக் கோரியுள்ளன.

ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக தீவில் நிலவும் இனக்கலவரத்தைத் தீர்ப்பதன் மூலம் இலங்கையில் நீதியை முன்னெடுப்பதற்கும், ஜனநாயகத்தை வளர்ப்பதற்கும், சுதந்திரத்தை மேம்படுத்துவதற்கும் முக்கியமான முன்முயற்சிகளை எடுக்குமாறு காங்கிரஸின் தலைவர்களை தாம் கேட்டுக்கொள்வதாக தமிழ் அமைப்புக்கள் கேட்டுள்ளன.

ஈழத் தமிழர்கள் தொடர்பில் 6 தமிழ் அமைப்புகள் விடுத்த அழைப்பு! | A Call Made By 6 Tamil Organizations Eelam Tamils

2009ஆம் ஆண்டு மே மாதம் முடிவடைந்த போரின் இறுதி மாதங்களில் குறைந்தது ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 679 தமிழர்கள் கணக்கில் வராத நிலையில் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் போயினர். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பரக் ஒபாமா, தனது ஜனாதிபதி நினைவுக் குறிப்புகளில், மோதலின் இறுதிக் கட்டங்களை 'இனப் படுகொலையைத் தடுப்பதில்' ஐக்கிய நாடுகள் சபையின் தோல்வி என்று குறிப்பிட்டிருந்தன.

இந்தநிலையில் சர்வதேச சட்டத்தின் கீழ், தமிழ் மக்கள் ஒரு தேசம், பொதுவான மொழி, கலாசாரம், வரலாறு மற்றும் புவியியல் ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என அமெரிக்க தமிழ் அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

தமிழ் மக்கள் தமது சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து மதிக்கப்பட வேண்டுமென நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தநிலையில் குறித்த நோக்கங்களுக்காக, சர்வதேச சட்டங்கள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்கும், தமிழ் மக்கள் தங்கள் அரசியல் அந்தஸ்தை சுதந்திரமாக தீர்மானிப்பதற்கும், அமெரிக்கா தலைமை ஏற்க வேண்டும் என்று அமெரிக்க தமிழ் அமைப்புகள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.

மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், சங்கத்தானை

18 Sep, 2025
மரண அறிவித்தல்

மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India

18 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

05 Oct, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Southend, United Kingdom

12 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

19 Sep, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2010
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், துன்னாலை, வல்வெட்டி, துணுக்காய், கொழும்பு, வவுனியா

20 Sep, 2015
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
கண்ணீர் அஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US