மட்டக்களப்பில் காரை மோதிய இ.போ.ச பேருந்து! இருவருக்கு நேர்ந்த நிலை
மட்டக்களப்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் கல்முனை பிரதான வீதியில் குருக்கள் மடத்தில் இன்று மாலை (07-06-2023) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கட்டுநாயக்காவில் இருந்து கல்முனை நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து அதே திசையில் முன்னே சென்று கொண்டிருந்த கார் ஒன்றின் மீது மோதியதனால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் மட்டக்களப்பில் இருந்து இரத்தினபுரி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கார் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், அதில் பயணித்த இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.