சுட்டெரிக்கும் வெய்யில்; யாழில் களைகட்டும் வெள்ளரிப்பழ வியாபாரம்!(Photos)
நாட்டில் கோடை காலத்தின் தாக்கம் தொடங்கிய நிலையில் வெள்ளரிப்பழம் படு மும்முரமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
குறிப்பாக யாழ்ப்பாணம் பண்ணை பகுதிகளிலும் மற்றும் திருநெல்வேலி மரக்கறிக்கடைத்தொகுதி வெளிப்புறங்களிலும் விற்பனை செய்யப்படுகின்றது.
450 முதல் 300 ரூபா வரை விற்பனை
ஒரு பெரிய வெள்ளரிப்பழத்தின் விலை ரூபா 450 முதல் சிறிய வெள்ளாரிப்பழத்தின் விலை ரூபா 300 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள மானிய அடிப்படையிலான உரமானியம் கிடைக்காத நிலையில் வெள்ளரிப்பழ விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதோடு விவசாயிகளிடம் இருந்து பெரிய வெள்ளாரிப்பழம் 01 கிலோ 350 ரூபாவிற்கும், சிறியது ஒரு கிலோ 200 ரூபாவிற்கும் கொள்வனவு செய்வதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.