பாரிய கடல் அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட 7 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்!
தங்கல்ல கபுஹேஹன்வல கடலில், தனது பெற்றோருடன் நீந்திக்கொண்டிருந்த 7 வயது சிறுமி ஒருவர், பாரிய கடலலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று (1) காலை இடம்பெற்றுள்ளது. பாணந்துறை கலுதெவல பிரதேசத்தைச் சேர்ந்த சேனாலி கிஹன்சா என்ற சிறுமியே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில் பிரேதப் பரிசோதனைக்காக தங்கல்ல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுமி தனது பெற்றோருடன் கப்புஹேன்வல பிரதேசத்திலுள்ள சுற்றுலா ஹோட்டலொன்றில் தங்கியிருந்த நிலையில், இன்று காலை கடலுக்குச் சென்றபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிறுமி கடலலையில் நீந்திக்கொண்டிருந்த போது பாரிய அலையொன்று வந்து சிறுமியை இழுத்துச் சென்றுள்ளதென தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் தங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.