டெங்குவால் உயிரிழந்த 22 வயது இளைஞன்
டெங்கு நோய்க்கு இலக்காகி போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 22 வயது இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சமபவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் மட்டக்களப்பு ஏறாவூரில் நேற்று சனிக்கிழமை (18) அதிகாலை உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெங்கு நோய்
நேற்று மட்டும் 14 பேர் டெங்கு நுளம்பு நோய் தாக்கத்தினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார பிராந்திய பணிப்பாளர் வைத்தியர் குனசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.
ஏறாவூர் ஜயங்கேணி பாரதிகிராமத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞன் டெங்கு நுளம்பு தாக்கத்துக்கு உள்ளாகி செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 16ம் திகதி மட்டு போதனா வைத்தியசாலைதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.