15 வயது மாணவனை நிர்வாணமாக்கி தாக்குதல்!
15 வயது மாணவன் ஒருவரை நிர்வாணமாக்கி, தாக்கி அவரது கையடக்கத் தொலைபேசியை பறித்துச் சென்ற பிறிதொரு மாணவன் உட்பட மூவர் கடந்த 4 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொடை, மாதம்பே மற்றும் வெல்லபட ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 16 வயது மாணவனொருவனும் 26 மற்றும் 34 வயதுடைய இரண்டு நபர்களுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் மூவரும் கைது
பாடசாலையிலிருந்து வீடு திரும்பிய மாணவன் , குளிர்பானம் வாங்குவதற்காக தனது வீட்டுக்கு அருகில் உள்ள கடையொன்றுக்கு சென்றுள்ளார்.
இதன்போது, பிறிதொரு மாணவனும், இரு நபர்களும் கடைக்குச் சென்ற மாணவனை கடத்திச் சென்று நிர்வாணமாக்கி தாக்கி மாணவனிடமிருந்த கையடக்கத் தொலைபேசியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக தாக்குதலுக்குள்ளான மாணவனின் தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். அதன் அடிப்படையிலேயே விசாரணைகளின்போது சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளில் அம்பலாங்கொடை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.