ஊருக்குள் வந்த 12 அடி நீள ராஜநாகம்; அச்சத்தில் மக்கள்!
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் 12 அடி நீளம் உள்ள ராஜநாகம் ஒன்று பார்த்து மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
அங்கு பெய்துவரும் கடுமழை காரணமாக ராஜநாகம் இருப்பிடத்தை விட்டு வெளியே வந்திருக்கலாம் என கூறப்படுகின்றது.
12 அடி நீளம் உள்ள ராஜநாகம் ஒன்று காம்பவுண்ட் சுவரின் மீது ஏறி மரத்தின் கிளைகளில் சுற்றிக் கொண்டிருந்தது. இதனையடுத்து அதுதொடர்பில் வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர்.
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையில் அகும்பே பகுதியில் 12 அடி நீளம் உள்ள ராஜநாகம் மரத்தின் கிளைகளில் சுற்றிக் கொண்டிருந்தது. இதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை அதிகாரிகள் பாம்பை லாவகமாகப் பிடித்து வனப்பகுதியில் விடுவித்தனர்.#Karnataka #HeavyRain #snake #dt pic.twitter.com/sLm5dxKpVZ
— DailyThanthi (@dinathanthi) July 20, 2024
தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் பாம்பை லாவகமாகப் பிடித்து வனப்பகுதியில் விடுவித்தனர்.