ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் 9000 க்கும் மேற்பட்பட வாகனங்கள் இறக்குமதி
கடந்த பெப்ரவரி மாதம் முதல் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் ஊடாக 9,151 பயன்படுத்தப்பட்ட மற்றும் புதிய வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
வாகன அனுமதி செயல்முறையை விரைவுபடுத்த புதிய வழிமுறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, சுங்க நடைமுறைகளை முறையாக நிறைவுசெய்த வாகனங்கள், தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்தவுடன் 24 மணி நேரத்துக்குள் விடுவிக்கப்படுகின்றன.
விடுவித்தல் செயல்திறனை மேலும் அதிகரிக்க, ஆவண செயன்முறை நிலையங்களை வார நாட்களில் இரவு 8:30 வரையிலும், சனிக்கிழமைகளில் பிற்பகல் 1.00 மணி வரையிலும் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது.