இந்தோனேசியாவில் கைதானவர்களுக்கு 90 நாட்கள் தடுப்புக்காவல்
கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சாலிந்தா உள்ளிட்ட ஐந்து நபர்களை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க காவல்துறையினர் தடுப்புக்காவல் உத்தரவுகளைப் பெற்றுள்ளனர்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் அவர்கள் தடுத்து வைக்கப்படுவார்கள் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சாலிந்தா, பாணந்துறை நிலங்கா, பேக்கோ சமன் மற்றும் தெம்பிலி லஹிரு ஆகியோர் அடங்கிய குழு ஆகஸ்ட் 27 ஆம் திகதி இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு சனிக்கிழமை இரவு (30) இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதனர்.
பத்மே, சாலிந்தா மற்றும் நிலங்கா ஆகியோர் மேலதிக விசாரணைகளுக்காக முதலில் குற்றப் புலனாய்வுத் துறையிடம் (CID) ஒப்படைக்கப்பட்டதாகவும், பேக்கோ சமன் மற்றும் தெம்பிலி லஹிரு ஆகியோர் விசாரணைக்காக மேற்கு மாகாண வடக்கு குற்றப் பிரிவின் காவலில் வைக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.