827 கிலோகிராம் பீடி இலைகள் பறிமுதல்
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட சுமார் 827 கிலோகிராம் பீடி இலைகளை இலங்கை கடற்படையினரும் கற்பிட்டி பொலிஸாரும் இணைந்து கைப்பற்றியுள்ளனர்.
கற்பிட்டி புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட விசேட கூட்டு சோதனை நடவடிக்கையின்போதே பறிமுதல் இடம்பெற்றுள்ளது.
சந்தேகத்திற்கிடமான கெப் வாகனமொன்றைச் சோதனையிட்ட அதிகாரிகள், அதில் 22 மூட்டைகளில் பொதியிடப்பட்டிருந்த பீடி இலைகளைக் கண்டுபிடித்துள்ளனர்.
குறித்த பீடி இலைகள் சட்டவிரோதமாக நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டவை எனச் சந்தேகிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில், பீடி இலைகளை ஏற்றிச் செல்லத் தயாராக இருந்த கெப் வாகனமும், சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பீடி இலைகள், கெப் வாகனம் மற்றும் சந்தேகநபர் ஆகியோர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.