இலங்கையில் 13 நாட்களில் 82 பேர் உயிரிழப்பு
இந்த ஆண்டின் முதல் 13 நாட்களில் இடம்பெற்ற 77 விபத்துக்களில் 82 பேர் உயிரிழந்துள்ளதாக வீதி பாதுகாப்பு பிரிவுக்கு பெறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்தார்.
விபத்துக்களில் பெரும்பாலானவை மதுபோதையில் வாகனம் செலுத்தியதால் ஏற்பட்டவை என்று தெரிவித்துள்ளார்.

ஒரு நாளைக்கு மதுபோதையில் வாகனம் செலுத்தும் 500பேர்
இலங்கையில் ஒரு நாளைக்கு மதுபோதையில் வாகனம் செலுத்தும் 500பேர் கைது செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கண்டறிவதற்கு போதுமான அளவு மூச்சுப் பரிசோதனை கருவிகள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மதுபானம் அல்லது போதைப்பொருள் பாவித்த பின்னர் வாகனம் ஓட்டுபவர்களை அடையாளம் காண்பதற்கு நடமாடும் போதைப்பொருள் சோதனை அலகுகள் நிறுவப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.