பொதுமக்களின் பாவனைக்காக : 411 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட எய்ட்டி கிளப்!

Colombo Sri Lankan Peoples
By Shankar Jun 25, 2023 11:07 AM GMT
Report

கொழும்பில் உள்ள பழமையான ஹோட்டல்களில் ஒன்றான எய்ட்டி கிளப் 411 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத் தெரிவிக்கையில்,

புராதன காணிகள் மற்றும் கட்டிடங்களை தேசிய பாரம்பரிய வலயமாக அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

பொதுமக்களின் பாவனைக்காக : 411 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட எய்ட்டி கிளப்! | 80 Club Of Colombo Action To Open For Public Use

கொழும்பிலும் புறநகர்ப் பகுதிகளிலும் இவ்வாறான பெறுமதிமிக்க 35-40 காணிகள் மற்றும் கட்டிடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார்.

அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக நீண்டகால குத்தகை அடிப்படையில் முதலீட்டாளர்களுக்கு இவ்வாறான காணிகளை விடுவித்துக் கொடுப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டுள்ளதாக தலைவர் குறிப்பிட்டார்.

அந்த காணிகளையும் கட்டிடங்களையும் புராதனத்துக்கு சேதம் விளைவிக்காமல் அபிவிருத்தி செய்வது கட்டாயம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுமக்களின் பாவனைக்காக : 411 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட எய்ட்டி கிளப்! | 80 Club Of Colombo Action To Open For Public Use

 "எய்ட்டி கிளப்" (80 CLUB) நிறுவனத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்ட நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத் இதனைத் தெரிவித்தார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் வரும் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் நிறுவனம் அதற்கான வசதிகளை வழங்குகிறது.

"எய்ட்டி கிளப்" என்பது கொழும்பில் உள்ள பழமையான ஹோட்டல்களில் ஒன்றாகும். கண்டி, குயின்ஸ் ஹோட்டலின் அறை எண் 80 இல் ஒரு சில உறுப்பினர்கள் நடத்திய முதல் கூட்டத்தின் காரணமாக இந்த கிளப் "எண்பது கிளப்" என்று அழைக்கப்படுகிறது.

பொதுமக்களின் பாவனைக்காக : 411 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட எய்ட்டி கிளப்! | 80 Club Of Colombo Action To Open For Public Use

பின்னர், கொழும்பு 07 சுதந்திர அவென்யூவில் நிறுவப்பட்டது. இது 2020 ஆம் ஆண்டு அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்ட பின்னர், இலங்கை கடற்படையின் ஆதரவுடன் நகர அபிவிருத்தி அதிகாரசபை இங்கு புனரமைப்பு பணிகளை மேற்கொண்டது. புனரமைப்புப் பணிகளுக்குப் பிறகு 2021 இல் மீண்டும் திறக்கப்பட்டது.

புதிய உணவகங்கள், சந்திப்பு அறைகள் மற்றும் ஒரு தனியார் சினிமா அறை உள்ளிட்ட சமீபத்திய சேர்த்தல்களுடன் எண்பது கிளப் இன்றுவரை கவர்ச்சியான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் கருத்து தெரிவித்த நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத், நகர அபிவிருத்தி அதிகாரசபையானது கொழும்பு மற்றும் கொழும்பு புறநகர் பகுதிகளில் கைவிடப்பட்ட அபிவிருத்தி செய்யக்கூடிய காணிகளை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொண்டது.

பொதுமக்களின் பாவனைக்காக : 411 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட எய்ட்டி கிளப்! | 80 Club Of Colombo Action To Open For Public Use

35 தொடக்கம் 40 காணிகளை அடையாளம் கண்டு அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை முன்வைத்தோம். நாங்கள் அமைத்துள்ள எய்ட்டி கிளப் பிரதேச செயலாளரின் கீழ் அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகளில் ஒன்றாகும்.

பழமையான மதிப்புள்ள கட்டிடம் இது. நகர அபிவிருத்தி அதிகார சபையின் திட்டப் பிரிவு இதற்கான முன்மொழிவை முன்வைத்தது. நகர அபிவிருத்தி அதிகார சபை 411 மில்லியன் ரூபா செலவில் எய்ட்டி கிளப்பை புனரமைத்தது. இதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்ட போது, ​​இவற்றை அபிவிருத்தி செய்து அப்புறப்படுத்தி பொதுமக்களின் நலன் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தோம்.

நகர அபிவிருத்தி அதிகார சபை இவற்றை முதலீட்டு நிலங்களாக இனங்கண்டு அபிவிருத்தி செய்தது. கொரோனா திட்டம் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இதற்கு முன்பு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவில்லை. இது உயர்தர விடுதியாக பொதுமக்கள் மத்தியில் வைக்கப்பட்டுள்ளது.

நாம் செலவிட்ட தொகையை ஈடுகட்டுவதுதான் நீண்ட காலத் திட்டம், இதை நீண்ட கால குத்தகை அடிப்படையில் முதலீட்டாளர்களிடம் விடுவித்து கொடுப்பது நகர அபிவிருத்தி அதிகார சபையின் திட்டமாகும். இது நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான காணியாகும்.

இங்கு உணவு, பானங்கள் உட்பட அனைத்தும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் உள்ள வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலால் வழங்கப்படுகிறது. முழு வேலையும் வோட்டர்ஸ் ஏஜ் நிறுவனம் மூலம் செய்யப்படுகிறது.

இலங்கையின் ஒவ்வொரு ஊர்களிலும் உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள் உள்ளன. இது உயர்தர ஹோட்டலாகப் பயன்படுத்தப்படுகிறது. விலைகள் குறைவாக இருக்கலாம். இது பொதுமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளது.

இங்கு எந்த நிகழ்ச்சியும் நடத்தலாம். இதேபோன்ற பல கட்டிடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. விசும்பாய, கபூர் கட்டிடம், ஹோட்டல் கிளப் கட்டிடம், GOH கட்டிடம். கபூர் கட்டிடத்திற்கு முதலீட்டாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் எண்ணக்கருவின் அடிப்படையில், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுடன் கலந்துரையாடி, கட்டிடங்களை தேசிய பாரம்பரிய வலயமாக அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர திட்டத்தை 2048 ஆம் ஆண்டு வரை நடைமுறைப்படுத்துமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் தலைமையில் பல சுற்றுக் கலந்துரையாடல்களை நடத்தினோம். 06 மாதங்களுக்குள் செய்து முடிக்க எதிர்பார்க்கிறோம். 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், London, United Kingdom

08 May, 2016
மரண அறிவித்தல்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Bochum, Germany

03 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பிரான்ஸ், France

09 May, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
4ம், 5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம், சிட்னி, Australia

05 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, London, United Kingdom

09 May, 2017
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், ஜேர்மனி, Germany

12 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு 13

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

06 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், வெள்ளவத்தை

06 May, 2026
மரண அறிவித்தல்

மந்துவில் மேற்கு, Toronto, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், கொழும்பு, Ilford, United Kingdom, Mundesley, United Kingdom

25 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

கட்டுவன், Bondy, France

06 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, South Harrow, United Kingdom

05 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US