இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சிக்கான 8 காரணங்கள்!
நாட்டில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கை ரூபாவின் பெறுமதி வேகமாக வீழ்ச்சியடைந்தமைக்கான காரணங்களை முன்னாள் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இது குறித்து முன்னாள் எரிசக்தி அமைச்சர் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், ரூபாவின் விரைவான மதிப்பிழப்புக்கான காரணங்களை எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.
அவையாவன,
1. மாற்று விகிதத்தை நீண்ட காலத்துக்கு செயற்கையாக வைத்திருத்தல்
2. இறக்குமதி செலவுக்கும் ஏற்றுமதி வருமானத்துக்கும் இடையே பாரிய இடைவெளி
3. பணவீக்கத்தை விட குறைவான வட்டி விகிதங்களை பராமரிப்பது, மக்களை சேமிப்பதற்குப் பதிலாக நுகர்வு செய்ய கட்டாயப்படுத்துகிறது.
4. பணத்தை அச்சிடுவதன் மூலம் பொருட்களின் தேவையை அதிகரிப்பது
5. இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் தேவைப்படும் புதிய திட்டங்களைத் தொடங்கு வதன் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் தேவையை அதிகரிப்பது.
6. கொடுப்பனவு இடைவெளிக்கு நிதியளிக்க வெளிநாட்டுக் கடனைச் சார்ந்திருத்தல்
7. பேரம் பேசுவது கடினம் என்று சர்வதேச நாணயச் சந்தையில் அதிகப்படியான வெளிப்பாடு
8. வெளிநாட்டுக் கடன்களை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்துவதற்கான பேச்சுவார்த்தை யில் தோல்வி என்பவயே எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.