இலங்கையில் ஒரு வழக்கில் 8 பேருக்கு மரண தண்டனை
கொலைச்சம்பவம் ஒன்று தொடர்பில் 8 பேருக்கு மரண தண்டனை விதித்து களுத்துறை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மைய தினம் ஒன்றில், கூரிய ஆயுதங்களால் நபர் ஒருவரைக் கொன்ற சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களுக்கு மரண தண்டனை வழங்கி களுத்துறை மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
20 வருடங்கள் நீடித்த நீண்ட விசாரணை
களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன குறித்த மரண தண்டனையை விதித்துள்ளார். கொல்லப்பட்ட நபர் களுத்துறை தெற்கு கலில் பிளேஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் களுத்துறை மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.
சுமார் 20 வருடங்கள் நீடித்த நீண்ட விசாரணையின் பின்னர் நீதிமன்றம் தீர்ப்பு அறிவிக்கப்பட்டதை அடுத்து, களுத்துறை நீதிமன்றத்திற்கு முன்பாக பெருமளவான மக்கள் திரண்டிருந்ததாக கூறப்படுகின்றது.