மட்டக்களப்பு கொலை வழக்கு ; முன்னாள் ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் 08 பேருக்கு மரணதண்டனை
2008 ஆம் ஆண்டு மட்டக்களப்பு, செங்கலடிப் பகுதியில் வைத்து தேவராசா சசிகுமார் என்பவரைக் கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் 08 பேருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் திகதி ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடிப் பகுதியில் வைத்து தேவராசா சசிகுமார் என்பவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

வழக்கு விசாரணைகள்
இந்தச் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் 09 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் இடம்பெற்று வந்தன.
இந்நிலையில், வழக்கின் 9ஆவது சந்தேகநபர் குற்றமற்றவர் எனத் தெரிவித்து நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ஏனைய 08 பேரும் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களுக்கு மரணதண்டனை விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.