ஒரே நாளில் 777 சந்தேகநபர்கள் அதிரடியாக கைது
நாடு முழுவதும் போதைப்பொருள் விநியோகத்தைத் தடுத்தல் மற்றும் அதற்கான தேவையைக் குறைக்கும் நோக்கில் இலங்கை பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள “முழு நாடும் ஒன்றாக” தேசிய விசேட நடவடிக்கையின் கீழ், நேற்று (06) மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது 777 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது பொலிஸாரால் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஹெரோயின் 434 கிராம் ஐஸ் (Ice), 477 கிராம் கொக்கெய்ன் 2 கிராம் 536 மில்லி கிராம், கஞ்சா 5 கிலோ கிராம் 658 கிராம் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த விசேட நடவடிக்கையின் போது 09 சந்தேகநபர்கள் தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் பற்றிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 15 சந்தேகநபர்களுக்கு எதிராகத் தடுப்புக்காவல் உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன.
அத்துடன், 19 நபர்களைப் புனர்வாழ்விற்கு உட்படுத்தவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட 762 சுற்றிவளைப்புகளின் போதே இந்த சந்தேகநபர்களும் போதைப்பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.