தொப்பை கொழுப்பு அதிகரிப்பதற்கான 7 காரணங்கள்; அவசியம் அறிந்துகொள்ளுங்கள்
குறைந்த உடல் இயக்கம், அதிக வேலைப்பளு, மன அழுத்தம், தவறான நேரத்தில் தவறான உணவை சாப்பிடுவது போன்றன , உடல் நலத்தை சீரழிக்கின்றது. அதுமட்டுமல்லாது இந்த பழக்க வழக்கங்களால் பலருக்கும் தொப்பை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்றைய இளைஞர் யுவதிகள் ஜிம் நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தொப்பை ஏற்படுவதற்கு 7 முக்கிய காரணங்கள் சொல்லப்படுகின்றது.
அவையாவன:-
தவறான உணவுப் பழக்கம்
குறைந்த புரதம், அதிக கார்ப், அதிக கொழுப்பு உணவுகள் கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை பாதிக்கிறது. புரோட்டீன் ஒரு நபரை நீண்ட நேரம் முழுமையாக உணர உதவுகிறது,
மேலும் மெலிந்த புரதத்தை உணவில் சேர்க்காதவர்கள் பசியால் தூண்டப்பட்டு அதிக உணவை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
துரித உணவுகள், பிஸ்கட்கள் மற்றும் பிற பேக்கரி உணவுகள் போன்றவற்றில் டிரான்ஸ்ஃபேட் உள்ளது.
உடற்பயிற்சி இல்லாமை
உடல் இயக்கம் குறைவாக இருப்பது வயிற்றை சுற்றிலும் கொழுப்பை அதிகரிக்கும் முக்கிய காரணியாக அமைகிறது.
உடலுக்கு தேவையான அளவை விட அதிக கலோரிகளை எடுத்துக் கொள்வதும் எடையை அதிகரிக்க முக்கிய காரணமாகும்.
அதிகப்படியான ஆல்கஹால்
அதிகப்படியான ஆல்கஹால் குடிப்பதால், ஆண்களின் வயிற்றை சுற்றிலும் உள்ள எடை அதிகரிக்கும். 4. மன அழுத்தம்: கார்டிசோல் - ஒரு நபர் மன அழுத்தத்தில் இருக்கும்போது ஒரு ஸ்டீராய்டு ஹார்மோன் வெளியிடப்படுகிறது மற்றும் உடலின் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கிறது.
மக்கள் மன அழுத்ததில் இருக்கும் போது, ஆறுதல் பெறுவதற்காக அதிக அளவிலான உணவை எடுத்துக் கொள்கின்றனர். கார்டிசோல் வயிற்றைச் சுற்றி அதிகப்படியான கலோரிகள் படிவதற்கு காரணமாகிறது.
மரபியல்
உடல் பருமனுக்கு மரபணுக்களும் ஒரு முக்கிய காரணமாக அமைவதாக பல ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
தூக்கமின்மை
குறைவான தூக்கம் அல்லது குறுகிய கால தூக்கத்திற்கு, அதிக உணவு உட்கொள்வதற்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
நைட் ஷிப்டுகளில் வேலை பார்ப்பவர்கள் நிம்மதியான தூக்கத்தை மேற்கொள்ள வாய்ப்பு குறைவு என்பதால், வயிற்று பகுதியில் அதிக அளவிலான கொழுப்பு சேரும் நபர்களாக மாறுகிறார்கள்.
புகைபிடித்தல்
புகைபிடித்தல் தொப்பை கொழுப்பு அதிகரிக்க மறைமுக காரணமாகும். புகைபிடிக்காதவர்களை விட புகைப்பிடிப்பவர்களுக்கு தொப்பை மற்றும் உள்ளுறுப்பு கொழுப்பு அதிகம் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எனவே இவ்வாறான பழக்கவழக்கங்களை தவிர்ப்பதன்மூலம் தொப்பை கொழுப்பை குறைக்கமுடியும் என சொல்லபபடுகின்றது.