ராஜீவ் காந்தி கொலை: 7 பேரின் விடுதலை தொடர்பில் தமிழக அரசின் முடிவு!
ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பில் தண்டணை பெற்ற 7 பேரின் விடுதலை தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (21-04-2022) விசாரணைக்கு வந்தது.
இதன்போது, ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் விடுதலை செய்யக்கோரிய நளினியின் மனு மீது விசாரணை நடத்தப்பட்டது.
இந்த வாதத்தின்போது, தமிழக அரசு சார்பில் தகவல் பதிவு செய்யப்பட்டது.
இதேவேளை, ராஜீவ் காந்தி (Rajiv Gandhi) கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரின் விடுதலை குறித்த கோப்புகள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் திகதி அன்று குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கு மீதான விசாரணையை வரும் 25 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.