நாட்டுக்கு வந்த 7000 மெற்றிக்தொன் லாப்ஃஸ் எரிவாயு
7000 மெற்றிக்தொன் லாப்ஃஸ் எரிவாயு நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக லாப்ஃஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுஅள்ளது. எரிவாயுவை ஏற்றிய கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாகவும் லாப்ஃஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதனூடாக நாடு முழுவதிலுமுள்ள தனது வாடிக்கையாளர்களுக்குத் தேவையான சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்க முடியும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, பண்டிகை காலத்தில் பற்றாக்குறை இன்றி லாப்ஃஸ் எரிவாயு விநியோகிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்தின் SHV Energy நிறுவனத்திடமிருந்து குறித்த எரிவாயு பெறப்பட்டுள்ளது.
மேலும் தற்போதைய உலகளாவிய புவிசார் அரசியல் மற்றும் விநியோகச் சங்கிலி சவால்களுக்கு மத்தியிலும், வலுவான சர்வதேச கூட்டாண்மைகள் மூலம் விநியோகத்தைப் பாதுகாப்பதில் LAUGFS Gas தொடர்ந்து கவனம் செலுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.