Rebuilding Sri Lanka இற்கு 697 மில்லியன்; 33 நாடுகளிலிருந்து நிதியுதவி!
Rebuilding Sri Lanka நிதியத்திற்கு இதுவரை 697 மில்லியன் ரூபாய்க்கும் அதிக நன்கொடை கிடைத்துள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.
பேரிடர் காலத்திற்குப் பின்னரான நடவடிக்கைகள் தொடர்பான பிந்திய தகவல்களை அறிவிக்கும் வகையில் வெளியிடப்பட்ட காணொளியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

33 நாடுகளிலிருந்து நிதியுதவி
அதன்படி Rebuilding Sri Lanka நிதியத்தின் இலங்கை வங்கிக் கணக்கிற்கு 635 மில்லியன் ரூபாய் நிதியும், இலங்கை மத்திய வங்கியின் கணக்கிற்கு 61 மில்லியனுக்கும் அதிக நிதியும் கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
33 நாடுகளிலிருந்து இந்த நிதியுதவி கிடைத்துள்ளதாகவும் நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, 30,470 பங்களிப்புகளின் ஊடாக இந்த நிதியுதவி கிடைத்துள்ளதாகவும் நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும சுட்டிக்காட்டியுள்ளார்.