யாழில் கடுமையான மழையால் 69 குடும்பங்களுக்கு ஏற்பட்ட நிலை!
யாழில் கடந்த இரண்டு நாளாக மழையுடன் கூடிய காலநிலை காணப்பட்டு வருகின்றதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, யாழில் 69 குடும்பங்களைச் சேர்ந்த 247 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.
இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊர்காவற்துறை, தெல்லிப்பளை, சங்கானை, சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 69 குடும்பங்களைச் சேர்ந்த 247 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, நான்கு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் கடுமையான மழையால் பாதிக்கப்பட்டோரின் விவரங்கள் அந்தந்த பிரதேச அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.