63 வயதான ஜேர்மன் நபருக்கும் யாழ். யுவதிக்கும் கோலாகலமாக நடந்த திருமணம்!
ஜேர்மனியில் இருந்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 63 வயதான நபருக்கும் 35 வயதான பெண்ணுக்கும் யாழ் வலிகாமம் பகுதியில் உள்ள பிரபல திருமண மண்டபத்தில் பெரும் விமர்சையாக திருமணம் நடைபெற்றுள்ளது.
மேலும் குறித்த இருவருக்கும் திருமணம் நடந்து விவாகரத்து ஆனவர்கள் என தெரியவந்துள்ளது. இதேவேளை, திருமணமான பெண்ணுக்கு இரு குழந்தைகள் உள்ளது குறிப்படத்தக்கது.
குறித்த திருமண நிகழ்வில் யாழ்ப்பாண அரசியல்வாதி ஒருவரும் கலந்து கொண்டிருந்ததாக தகவல் வெளிவந்தன.
மேலும் இந்த திருமணத்தில் மணமகளின் சேடிப் பெண்களாக பெண் குழந்தைகளுடன் குழந்தைகளாக மணமகளின் இரு பெண் பிள்ளைகளும் பூ கொண்டு தாயின் பின்னால் சென்றுள்ளதாக தெரியவருகின்றது.
மணமகனான மாப்பிளைக்கும் மணமகளின் வயதில் ஒரு ஆண் பிள்ளை இருப்பதாகவும் அந்தப் பிள்ளையும் திருமணம் முடித்து மணமகளின் பிள்ளைகளின் வயதில் குழந்தைகள் உள்ளதாகவும் தெரியவருகின்றது.
63 வயதான ஜேர்மன் நபர் 58 வயதில் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளதாக தெரியவருகின்றது.