பிக்குகள் என சந்தேகிக்கப்படும் 6 இளைஞர்கள் கைது
பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் பிக்குகள் என சந்தேகிக்கப்படும் 6 இளைஞர்கள் மதுபோதையில் கண்டி நகரில் வைத்து கைது செய்யப்பட்ட சம்பவம் நிகழந்துள்ளது.
கண்டி தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி ரசிக சம்பத் உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் இன்று (ஜன 30) அதிகாலை மேற்கொண்ட தேடுதலின்போது கண்டி மணிக்கூட்டுக் கோபுரத்திற்க்கு அருகில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய இந்தக் குழுவினரை கைது செய்தனர்.
அடையாள அட்டைகள் இல்லை அவர்கள் பிக்குகள் குழு என தெரியவந்துள்ளது.
அவர்களில் 5 பேர் பேராதனை பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் பிக்குகள் எனவும் ஒருவர் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் பிக்கு எனவும் தெரியவந்துள்ளது.
கண்டியில் உள்ள மதுபான நிலையம் ஒன்றில் இவர்கள் மது அருந்தியதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.