யாழில் 6 வயது சிறுவன் சடலமாக ! பெரும் சோகத்தில் குடும்பம்
யாழ்ப்பாணம், சங்கானை பகுதியில் காணாமல் போன 6 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சங்கானை தேவாலய வீதி பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று பகல் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென காணாமல் போயிருந்தார். பல இடங்களிலும் தேடிய பெற்றோர், சிறுவனை காணாத நிலையில் நேற்றிரவு மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
இதேவேளை, நேற்று பின்னிரவில் சிறுவன் காணாமல் போன இடத்திலிருந்து சற்று அப்பாலான பகுதியில், குட்டையில் சிறுவனின் சடலம் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
பார்த்தீபன் ஸ் ரீபன் என்ற சிறுவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முன்னைய செய்தியில் அது நீர் விநியோகத்திற்காக அமைக்கப்பட்ட கிடங்கில் வீழ்ந்ததாக குறிப்பிட்டிருந்தோம். அந்த தகவலில் திருத்தமுண்டு. எனினும், சிறிய குட்டையொன்றிலேயே சிறுவன் வீழ்ந்துள்ளார்.
பருவமழை காலத்தில் அதில் நீரை சேமிக்க, ஆழப்படுத்தப்படுவதுண்டு. வழக்கம் போல இம்முறையும் வலிகாமம் மேற்கு பிரதேசசபை அந்த குட்டையை தூர் வாரியிருந்தது.